சூது கவ்வும் - திரை விமர்சனம்

சூது கவ்வும் - திரை விமர்சனம்




கிட்நாப் பண்ணி பணத்தை சுருட்டும் த்ரில் டைப் கதையை ஜாலி கேலி ரூட்டில் கியர் தட்டி கலகலப்பூட்டும் ‘சூது கவ்வும்’.

யூட்யூப்-ல் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ‘நலன் குமரசாமி’க்கு இப்படம் வெள்ளித்திரையில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கிறது.

எல்லாத்தையும் காமெடி கலந்து ட்ரீட் பண்ற நலனுடைய திரைக்கதை படத்துக்கு பலம்.

விஜய் சேதுபதி மட்டும் தான் ஹீரோனு சொல்ல முடியாது அல்மோஸ்ட் 'மங்காத்தா டைப்' மல்டி ஸ்டாரர் சப்ஜெக்ட் தான். கொஞ்சம் 'மும்பை எக்ஸ்பிரஸ்'யும் உல்டா அடித்து இருக்கிறார்கள்.

தனக்கென ரூல்ஸ் போட்டு கிட்நாப் பண்ணும் உதார் டீமுக்கு பாஸ் விஜய் சேதுபதி. கடத்தும் போது பெண்கள் கிட்ட அடிவாங்கறதும், கடத்தின பிறகு பணம் கேட்டு மிரட்டாம, உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ? ! சமாளிசுடுவீங்களா?னு கேட்டுவிட்டு, ஆறுதல் சொல்லி ‘கைப்புள்ள’ஆக நடுங்குகிறார்.

நாயகியாக சஞ்சிதா ஷெட்டி செம ஹாட்.

அலாரம் வெச்சு எழுந்து தண்ணி அடிக்கும் ரமேஷ் திலக், அம்மா ! அப்பா பிசினஸ்க்கு பணம் தரல நான் இனி சிகரெட் பிடிக்க போறேன்னு சொல்லிட்டு போகும் கருணாகரன், நயன்தாராக்கு கோவில் கட்டும் சிம்ஹானு எல்லாருமே நிறைவா பண்ணியிருக்காங்க.

ரொம்ப முரடன், சைகோனு பில்ட் அப் கொடுத்துட்டு ஒரு வார்த்தை கூட பேசாம சீரியசான யோக் ஜப்பியோட போலிஸ் கேரக்டர கொஞ்ச நேரத்துலையே டம்மி பண்ணினது திரைக்கதையின் விறுவிறுப்ப காலி பண்ணிடுச்சு பிரதர்.

விஜய் சேதுபதியோட கற்பனை கதாபாத்திரமான சஞ்சிதா ஷெட்டியோட கேரக்டர அவங்க இறந்த பின்பு ரிவீல் பண்ணியிருந்தா காதல், வலி, இந்த எக்சைட்மென்ட்னு இன்னும் சர்ப்ரைஸா இருந்துருக்கும்.

இந்த தொழிலுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேணும், இவ்வளவு நாள் உங்கப்பா கிட்ட ஃபிராட் பண்ணினல? அதுதான் அரசியல் அப்பாவுக்கு பதில் மக்கள், இது இட்லினு சொன்னா சட்டினி கூட நம்பாதுனு அடிக்கிற ரன்னிங் கமெண்ட்ஸ் தூள்.

விஜய் சேதுபதி க்ரூப்-அ அந்த இருட்டறையில் வைத்து அடிக்கும் போது வர டூயட் கொஞ்சம் BP-அ எகிற வைக்கிறது.

இசை சந்தோஷ் நாராயணன். பாட்டு எதுவுமே சரி இல்ல. பின்னணி இசையும் பெரிதாக கவரவில்லை. பாடல்களோட மேக்கிங் மட்டும் கலகலப்பாக இருந்தது. ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன்.

கருணாகரன் விஜய் சேதுபதிக்கு இரண்டு கோடி ரூபாய்ல ஷேர் கொண்டு வந்து கொடுத்துடறார் , மற்ற ஃபிரென்ஸ் பாலிடிக்ஸ்க்கு போயடறாங்க அப்படி இருக்கும் போது திரும்ப கிட்நேப் தொழிலுக்கே விஜய் சேதுபதி வருவது ஏன்?

நலன் குமரசாமியோட குறும்படங்கள் பார்க்கும் போது கெடச்ச எக்சைட்மென்ட் இந்த இரண்டேகால் மணி நேரத்துல கொஞ்சம் மிஸ்ஸிங்.

பர்டிகுளர் ஆடியன்ஸ மட்டுமே டார்கெட் பண்ணி எடுத்து இருக்கிறதுனால மற்ற ஏஜ் க்ரூப்கான ஃபேக்டர்ஸ் எதுவும் படத்துல இல்ல. ஸோ எல்லா டைப் ஆஃப் ஆடியன்ஸ்கிட்ட ரீச் ஆகறது கொஞ்சம் கஷ்டம் தான்.

சூது கவ்வும் - இளைஞர்களை மட்டும் கவரும்.

நன்றி: உன்னைப்போல் ஒருவன்


You may also like

No comments: