Showing posts with label Tamil Posts. Show all posts
Showing posts with label Tamil Posts. Show all posts
நேரமாகிக்கொண்டே இருந்தது; வெளிச்சமில்லாத இடத்தில் நேரம் போவது சற்று கொடுமையாகவே இருந்தது. ஏதோ வெளியிலிருந்து வருவது போல் இருந்தது. கட்டையான குரலில், "வாங்க போலாம், அது நமக்கான விண்கலம் தான். இன்னும் ஒருமணி நேரத்துல பூமிக்கு போயிடலாம்", என்ற இயந்திரமனிதனின் கட்டளையை ஏற்றுக்கொண்டது போல கரிகாலன் வெளியே வந்தார்.

நாசா விண்கலம்
நாசாவின் விண்கலம். பட உதவி: நாசா
மிகவும் நெலிந்து போயிருந்த கரிகாலன் கடந்த 20 நிமிடங்களாக உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. மின்னலொளி யில் இயங்கும் வீட்டின் மின்சாரத்தை துண்டித்திருந்தார். பூமியைப் பற்றிய நினைவுகள் வந்து போயின. கடந்த மூன்று ஆண்டுகளில் தன்னுடைய விண்கலத்தையும், இயந்திரமனிதர்களையும் தவிர வேறு எதையும் கவனத்தில் கொள்ளாத கரிகாலன், தன்னுடைய கொள்ளுப்பேரன் மூன்றாம் கரிகாலனையும், எள்ளுப்பெயர்த்தி நல்லினியையும் வீனசிலிருந்து பூமிக்கு வரச்சொல்லியிருந்தார்.

கரிகாலன் 2020-ம் ஆண்டு புவி வெப்பமயமாதலும் , கொடிய நச்சு பரவுவதன் காரணத்தாலும், செவ்வாய் கிரகத்திற்கு நுழைவிசைவு வாங்கிச்சென்றார். பூமியிலிருந்து வேலைக்கு ஆட்கள் வருவதை செவ்வாய் வாசியினர் விரும்பவில்லை. ஆயினும், ஆயுளை நீட்டிக்கச்செய்யும் ஆராய்ச்சியில் எலான் மஸ்க் விருது வாங்கியிருந்த மாறவர்மனின் கூற்று பொய்யென நிறுவியிருந்ததால் செவ்வாய் செல்வதற்கு நுழைவிசைவு கிடைத்தது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க். பட உதவி: விக்கிப்பீடியா
இரண்டு ஆண்டுகளில் மாறவர்மனும் கரிகாலனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டாம் கரிகாலனும், மூன்றாம் கரிகாலனும் மாந்தர் படியாக்கம் முறையில் உருவானார்கள். ஹ்யூமனாய்டுகளை கொள்ளுப்பேரன்களாகவும் எள்ளுப்பெயர்த்திகளாகவும் தத்தெடுத்துக் கொண்டனர். 2030, செவ்வாய் பகுதி-33 நேரப்படி காலை 9:00 மணிக்கு பூமிக்கு முதலாம் கரிகாலன், மூன்றாம் கரிகாலன், நல்லினி, மாறவர்மன் என அனைவரும் வந்திருந்தனர்.

மாறவர்மனின் கையிலிருந்த திறன்கடிகாரம் , 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ம் நாள், இந்தியநேரப்படி இரவு 8:35 மணிக்கு பூமியில் நடந்த இயற்கைப் பேரழிவைப் பற்றிய காட்சிகளையும் , அதன் பகுப்பாய்வுகளையும் , மனித உயிரிழப்புகளையும் , துயரங்களையும் அனைவரின் கண் முன்னே கொண்டு வந்தது. அரை மணித்துளிகள் இக்காட்சிகள் அனைவரின் கண்முன் தோன்றியது. கரிகாலன் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தோடியது. ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டனர், எதுவும் பேசவில்லை.

கரிகாலன் தன் கண்களை மூடினார், பிறகு திறக்கவே இல்லை...

முற்றும்.


குறிப்பு: இந்தக் கதை, வா. மணிகண்டனின் நிசப்தம் ப்ளாக்கில் நடந்த சிறுகதைப் போட்டிக்காக, Oct 5, 2017 அன்று எழுதியது. போட்டியில் என் கதை தேர்வாகவில்லை.

2020-இல் நடப்பது ஒத்துப்போகிறது. அதனால் குறிப்புகளை சேர்த்துள்ளேன்.


அடிக்குறிப்புகள்

நிலக்கரி படுக்கை மீத்தேன் (அ) கோல் பெட் மீத்தேன் .

பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி படுகைகளில் விரவிக்கிடக்கும் மீத்தேன் வாயு அழுத்தம் காரணமாக அங்கே பொதிந்துள்ள நிலக்கரி கற்களின் புறப்பரப்பில் மெல்லிய தாள் போன்று படிந்து கிடக்கின்றன. நிலக்கரி படுகைக்குள் இருக்கும் புவியழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த சூழ்நிலையில் உள்ள நிலத்தடி நீராகும்.

நிலக்கரி படுகையில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியே எடுக்கும்
போது மீத்தேன் வாயுவும் நீரோடு சேர்ந்து வெளிவரும். வெளியே எடுக்கப்பட்ட நீர் உரிய உபகரணங்களுக்குள் செலுத்தப்பட்டு நீரும் மீத்தேன் வாயுவும்
தனித்தனியே பிரித்து எடுக்கப்படும். இந்த திட்டத்தில் லட்சக் கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் ராட்சத முறையில் உறிஞ்சி எடுக்கப்படும். வெளியேற்றப்பட்ட  மீத்தேன் பிரிக்கப்பட்ட வாயு, நச்சுத்தன்மையுள்ள ரசாயன மூலக்கூறுகளை கொண்டிருக்கும், அதை நீர் என்பதை விட "நச்சுக்கழிவு" என்றே கூறவேண்டும்.

ஆழ்துளைக் கிணறுகள் வெட்டி, முதலில் 500 முதல் 1650 அடி ஆழம் வரை உள்ள நன்னீரை அசுர நீர் இறைப்பிகளால் இறைத்து வெளியே விடுவார்கள்.
அப்படி இறைக்கும் போது, நன்னீருடன் உப்பு, அமிலம், கரியும் கலந்து கெட்ட நீராக மாறிவிடும். அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும்,
குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள்.

நிலத்தடியில் இருந்த நன்னீர், கெடு நீராக மாறியதொடு, வாய்க்கால், ஆறுகள், ஓடைகளில் ஓடும் நன்னீரையும் கெடு நீராக மாற்றி விடும். இப்படி நீரை இறைத்து வெளியேற்றியவுடன், அசுர உறிஞ்சிகளால் நிலக்கரிப் பாறைகளில் இருக்கும் நுண் துளைகள் வழியே வரும் மீத்தேனை உறிஞ்சி எடுப்பார்கள்.
இப்படி எடுக்கப் பட்ட மீத்தேனை பெருங்குழாய்கள் வழியே அனுப்பப்படும்.

இது ஒரு வகை மீத்தேன் எடுக்கும் முறை, இதை தான் கோல் பெட் மீத்தேன் என்பர், செலவு மிகுந்தது மற்றும் சுற்றுசூலலுக்கு கேடுவிளைவிக்கும் முறையும் கூட; ஆனால் இதில் உற்பத்தி அதிகம், ஆதலால் அரசு இம்முறையை கையால நடவடிக்கை எடுக்கிறது.

இன்னொரு முறையானது Bio-fuel எனப்படும். விலங்குகள், மற்றும் கால்நடை கழிவுகளிள் இருந்து எடுக்கப்படும் மீத்தேன்.

இம்முறையில் கழிவுகளை ஒன்று சேர்த்து ஒரு வித சேம்பரில் இட்டு சில ரசாயன மாற்றங்களை நிகழ்த்தி மீத்தேன் பிரித்து எடுக்கப்படும், இம்முறை சுற்றுசூழலுக்கு எவ்வகையிலும் பாதிப்பு இல்லை, இம்முயை கையாண்டால் கால்நடை வளர்ப்பு அதிகம் ஆகும் ஆதலால் கிராமப்புறம் வளர்ச்சி அடையும்.

ஆனால் இம்முறையில் உற்பத்தி மிக குறைவே.

வாழ்வாதாரத்தை அழித்து உற்பத்தியை பெருக்கி அதை பயன் படுத்தி என்ன பயன் காண்கப்போகிறோம்!....?

நம் பினங்களுக்கு விறகுக்கு பதிலாக !! மீத்தேனை வைத்து எரியூட்டுவதைத் தவிர,,,...,,!!!!

நன்றி : டைகர் 
பொய்


உலக மொழிகள் சிலவற்றில் ‘பொய்’ என்ற வார்த்தையே இல்லையாம். அதற்கு என்ன அர்த்தம் ? அவர்கள் வாழ்க்கையில் பொய் என்பதே இல்லை என்று அர்த்தம். எதையும் மாறாக மறைத்துச் சொல்லவே மாட்டார்கள் என்று அர்த்தம். அதுபோல் நம் மொழியில் கடன் என்ற சொல் உள்ளது. அது ஆங்கிலச் சொல்லான லோன் என்னும் பொருளைத் தருவதன்று. கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்பதே பொருள். கடன் என்பதற்குக் கடப்பாடு, முறைமை ஆகியனவும் நம் தொன்மையான பொருள்கள். ஒருபோதும் அச்சொல்லுக்குத் தற்கால வழக்கில் வழங்கப்படும் கடன் என்ற பொருள் கிடையாது. என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றால் என் கடமை என்றே ஆகும். திருக்குறளில் இடம்பெறும் கடன் என்னும் சொல் கடமையைத்தான் குறிக்கிறது.


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்(கு) 
உப்பாதல் சான்றோர் கடன்.

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து 
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

இவையாவும் கடன் என்னும் சொல்லைக் கடமை என்ற பொருளில் பயின்ற குறட்பாக்கள். நாம் கடன்பெற்று வாழ்ந்தவர்கள் அல்லர். கொடை தருவதைப் பண்பாடாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் கொடுத்தலும் பெற்றுக்கொள்வதும் எந்த நெருக்கடியுமற்ற இயல்பான நடத்தையாக இருந்தது. சுமார் இருபதாண்டுகளுக்கு முன்வரைகூட கடன் என்பது நம்முன் வைக்கப்பட்ட வாழ்க்கை நிர்ப்பந்தமாக இருக்கவில்லை. ஆனால், தற்காலத்தில் நிலைமையே வேறு.

அப்போதும் நமக்கு வீடுகள் இருந்தன. விவசாய நிலங்கள் இருந்தன. கல்வி பயின்றோம். வாழ்க்கைக்குப் பல்வேறு தேவைகள் இருந்தன. யாரும் கடன்பட்டுக்கொண்டிருக்கவில்லை. ‘அவங்களுக்குக் கடன் இருக்குதாமா...’ என்பது அதிர்ச்சிகரமான ஒரு கிசுகிசுப்பாகப் பரவிய நிலையும் இருந்தது. ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருப்பவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். சிறுசிறு கைமாற்றுகள் பண்ட மாற்றுகள் ஆகியவை இருந்தன. அதற்கே கடப்பாடுற்றவர்களாய் உறங்கமாட்டார்கள்.

நீங்கள் மாதச் சம்பளக்காரர்களாக, தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள். குடும்பத் தலைவர் அல்லது தலைவி. உங்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாரும் வளர்ந்து பொருள் செய்கின்றோராகத்தான் மாறுகிறோம். இந்த உலகத்தின்மீது நமக்குள்ள ஒரே அதிகாரம் நாம் ஈட்டிக்கொள்கின்ற நம் பணம்தான். அதைக்கொண்டு நம் தேவையை நிறைவேற்றுகிறோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியனவற்றுக்காகச் செலவிடுகிறோம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் மனமகிழ்வுக்கும் நம் பணத்தைச் செலவிடுகிறோம். நம் சம்பாத்தியத்தில் செலவுபோக கணிசமாக மீதமாகிறது. அவற்றைச் சேமிக்கிறோம். சேமித்தவற்றைக்கொண்டு செயற்கரிய செயல் ஒன்றைச் செய்துகொள்கிறோம். அல்லது பற்றாக்குறையான காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறோம். வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது. இது ஒரு வகை.

இன்று உங்களால் அதுபோல் வாழமுடியுமா ? கல்வியை விற்கிறார்கள். கல்விப் பருவத்திலிருந்தே நம்மைக் கடனாளி ஆக்குகிறார்கள். கற்றுவெளிவந்தபின் அந்தக் கல்வியைக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும். சம்பாதித்தவுடன் முதற்கடமையாக பழைய கடன்களை அடைக்க வேண்டும். உணவுக்கு நிறையச் செலவாகிறது. போக்குவரத்துக்கு வாகனம் வேண்டும். அதைக் கடன்பட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். உடைகள் கொள்ளை விலை விற்கின்றன. அந்தச் செலவுகளையும் சமாளிக்கவேண்டும். உறைவிடம் என்றால் நமக்குச் சொந்த வீடு பூர்வீகத்தில் இருக்கும்தான். ஆனால் பூர்வீகத்தில் நாம் உயிர்வாழும் வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. நகர் நாடிப் பிழைக்கிறோம். நகரத்தில் வீட்டுவாடகை கட்டுக்கடங்குவதில்லை. அங்கே இடத்திற்கும் கொள்ளைவிலை. வீடு வாங்கிக்கொள்வதன் மூலம் வாடகையையும் வரிப்பிடித்தத்தையும் மீதமாக்கிக்கொள்ளலாம் என்ற மாயையில் நம்முடைய ஒட்டுமொத்த எதிர்கால வருமானத்தை எழுதிக்கொடுத்து வீடு வாங்கிக்கொள்கிறோம். அடுக்குமாடி வீடு என்றால் வாடகைக்கு நிகரான பணத்தை ‘பராமரிப்பு மற்றும் இதர பிறவற்றுக்காக’ அழுவோம். நாம் உயிரோடிருப்பதற்கு வேண்டிய சிறுதொகைபோக மீதத்தொகையை அந்த வீட்டுக்காக இருபதாண்டுகள் தொடர்ச்சியாகக் கட்டுவோம். கட்டி முடித்தபின் நம் பொருளீட்டும் ஆற்றல் முற்றாக வடிந்திருக்கும். நம்மை நாமே கைவிடக்கூடிய பொருளாதார விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருப்போம். நீங்கள் அவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். ஒருபோதும் எதுகுறித்தும் கேள்வி கேட்க மாட்டீர்கள். அருகில் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தானா... நம் இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றனவா... நம் தலைமாட்டில் அணு உலைகள் தகிக்கின்றனவா... கல்விக்கொள்ளையா... மருத்துவத்தில் இரத்தம் உறிஞ்சுகின்றனரா... குடியடிமைத்தனம் பெருகிவிட்டனவா... எங்கும் ஊழலா... பெண்களும் குழந்தைகளும் எல்லாச் சீரழிவுக்கும் ஆளாகின்றனரா... எவனோ எப்படியோ போகட்டும். உங்களுக்கு மாதம் பிறந்தால் இஎம்ஐ கட்டியாகவேண்டும். தலையைக் குனிந்துகொண்டு வாழ்பவராய், சூடு சுரணையற்ற ஜென்மமாய், தன்னலவாதியாய் மாற்றப்பட்டுவிட்டீர்கள். இனி உங்களைக் குறித்து யார்க்கும் அச்சமில்லை. நீங்கள் முடித்துக்கட்டப்பட்டுவிட்டீர்கள்.

நீங்கள் கேட்கவேண்டும்... யார்வந்து யார்க்குக் கடன் கொடுப்பது ? கடன்படவேண்டியவர்களா நாம் ? என் அழகிய பொருள்பொதிந்த வாழ்க்கை கடன் துளையை அடைப்பதற்காக ஆயுள்முழுக்க அல்லாடுகின்ற ஒன்றா ? அப்படி என்ன வெங்காயத்தை நான் பெற்றுக்கொள்ளப்போகிறேன் ? என் கல்விக்கு எப்படி விலைவைத்தாய் ? என் உறைவிடத்துக்கும் அதன் நிழலுக்கும் எட்டாத விலை வைத்தவர் யார் ? என் தேவைக்கும் ஈட்டலுக்கும் பொருந்தாச் சமனை உருவாக்கியவன் எவன் ? நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் கேட்கமாட்டீர்கள். உங்களுக்குக் கடன் இருக்கிறது. மாதம் ஆயிரத்தைந்நூறு கட்டுவதுபோல் ஒரு பைக் வாங்கினீர்கள். ஒருதவணை பிசகட்டுமே. உங்கள் ஏழ்பிறப்புக்கும் மறவாத ஈன விசாரணையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். இத்தனைக்கும் மறுநாள் உரிய வட்டியோடும் தண்டத்தோடும் செலுத்தச் செல்கிறீர்கள்தான். கட்டாதபோது வண்டியை எடுத்துக்கொள்ளலாம் அவன். ஆனால், உங்கள் தன்மானத்தைக் குத்திக் குதறியெடுப்பதில் உங்களுக்குக் கடன் கொடுத்தவன் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சொற்களில்தாம் எத்துணை அதிகாரம் ? அடிமைபோல் உணரவேண்டும் நீங்கள். ஆனால் கமுக்கமாக இருந்துகொள்வீர்கள். இந்தச் செயலில் இருப்பவன்தான் நம் வங்கியாளன்.

என் நண்பர்களிடம் நான் சொல்கின்ற அறிவுரை இரண்டே இரண்டு: குடிக்காதே... கடன் வாங்காதே...! குடிப்பதில் மதுவும் புகையும் அடக்கம். குடியடிமை மீள்வதில்லை. தன்னைக் கொன்றுகொண்டிருக்கும் அவன் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டவன். தன்னின்பத் தருக்கன் அவன். உங்கள் நுரையீரலின் காற்றை உறிஞ்சும் திறனுக்குப் பெயர்தான் உயிர். பிராணமய. புகைப்பதன் மூலம் அந்தக் கருவியைப் பொசுக்குகிறீர்கள். குடியும் புகையும் உள்ளவர்கள் ஏதோ ஓரிடத்தில் தன்னை, தன்சார்ந்தவர்களை மொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள். அவனைச் சார்ந்திருக்கும் உறவுகள் நரகத்தில் உழல்வோரே. இதைப் போதிக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாரும் குடியடிமைகள். அதனால் அவர்கள் இதுகுறித்த மாற்றுப்பார்வை என்பதுபோல் நீட்டி முழக்குவார்கள். அவை பயனற்றவை. அடுத்து கடன் வாங்குவது. பத்தாயிரம் ரூபாய் ஓரிடத்தில் வாங்கிக்கொண்டு ஒருமாதம் கழித்து அதே பத்தாயிரமாகத் திருப்பிக்கொடுப்பது கைமாற்று. இது நம் வலுவுக்கடங்குகின்ற ஒன்று. சுற்றோட்டத்தில் சிறு நிகழ்வு. யார்க்கும் பாதிப்பில்லை. எங்கும் வழக்கமாக இருக்கின்ற ஒன்று. ஆனால், வட்டி என்கின்ற ஒன்று தோன்றுமிடத்திலும், நம் வாழ்க்கையின் பெரும்பகுதி தவணையாய் அடைக்கவேண்டிய பகாசுரக் கடனுக்கு இலக்காகும் இடத்திலும் நீங்கள் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொள்கின்றீர்கள். அங்கே நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள். கடன் என்ற மாயையில் விழுந்து ஏமாறுகிறீர்கள்.

கடன்



பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கடன்பட்டு பத்து இலட்சத்துக்கு வீடு வாங்கினேன். இப்போது அந்த வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். எனக்கு எவ்வளவு இலாபம் தெரியுமா ? கடன்வாங்காதிருந்தால் இவ்வாய்ப்பை இழந்திருப்பேனே... இப்படிச் சொல்கிறவர்கள் ஏராளம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் மிகப்பெரிய பொருளாதாரப் போக்குகளின் சிறுகண்ணிகள். 1998-இல் பத்து இலட்சத்துக்கு வாங்கிய வீட்டின் மதிப்பைத் தங்கத்தில் பாருங்கள். அப்போது பவுன் விலை ரூ. 3200. அந்தப் பத்து இலட்சத்துக்கு 312 பவுன்கள்/சவரன்கள் வாங்கியிருக்கலாம். இப்போது அவ்வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். இன்றைய பவுன் விலை ரூ. 20000 எனக்கொள்வோம். அந்த நாற்பது இலட்சத்துக்கு 200 பவுன்கள் மட்டுமே வாங்க முடியும். உங்கள் சொத்து மதிப்பு - சுமார் நூறு சவரன்கள் அளவுக்குக் காணாமல் போயிருக்கின்றது. எண்கள் பெருகிவிட்டனவேயொழிய மதிப்புயரவில்லை. ஒருவேளை அவ்வீட்டின் தற்கால மதிப்பு அறுபது இலட்சம் எனில் எந்த உயர்ச்சியும் ஏற்படவில்லை. எண்பது இலட்சம் என்றால் போட்ட முதலுக்குக் கொஞ்சூண்டு வட்டி கிடைத்திருக்கிறது. பெருந்தொகைக்குச் சொத்துகளை விற்பது அத்துணை எளிதன்று. உங்கள் ஒற்றைக் கையெழுத்தையோ அல்லது இசைவான ஒரு தலையசைப்பையோ வைத்துக்கொண்டு உங்கள் அசையாச் சொத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் ஈனக்கூட்டம் ஒன்று அரசியற்பலத்தோடு ஸ்கார்பியோக்களில் திரிவதை அப்போதுதான் உணர்வீர்கள்.

அடுத்து 1991 முதல் 2010வரை மதிப்புயர்ந்ததுபோல் இனியும் ஆகும் என்றெண்ணாதீர்கள். 1975முதல் 1989வரை இந்நாட்டின் சொத்துகள் எந்த விலையுயர்ச்சியையும் பெரிதாகக் காணவில்லை. எல்லாம் அப்படியப்படியே கிடந்தன. கடந்த 2011க்குப் பிறகு தங்கம் வெள்ளி போன்றவற்றின் விலை தம் உயர்ச்சியைத் தக்கவைக்கமுடியாமல் சன்னஞ்சன்னமாகச் சரிந்துகொண்டிருக்கின்றன. இனி அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு இத்தகைய நிலையே நீடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? நிலத்தின் விலைகள் தடுமாறுகின்றன. நில வியாபாரிகள் ஒருபோதும் தங்கள் நிலங்களை இருப்பாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். நிலத்தை விற்று விற்று பணமாக்கிக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஏன் அவர்கள் விற்பது விலையேறுகின்ற ஒன்றாயிற்றே... வைத்துக்கொள்ளலாமே. மாட்டார்கள். அங்கே நீங்கள் இலக்காவீர்கள். வரிக்குப் பயந்து வீட்டுக் கடன்களை வாங்காதீர்கள். எண்ணெய்ச் சட்டிக்குள் விழப்பயந்து எரிக்குள் விழுவதைப் போன்றதுதான் அது. எழுபதாயிரம் எண்பதாயிரம் வருமானம் உள்ள உங்களால் ‘பத்தாயிரம் சேமிக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை என்றால் உண்மையில் நீங்கள் யார் ? இங்கே சம்பாதித்து எங்கோ எடுத்தெறிகின்ற ஊதாரியா ? வெறும் பணமாற்று நிலையமா ?

ஒவ்வொரு ஆயிரமாகச் சேமியுங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முதல் ஒரு இலட்சத்தைச் சேர்க்கும்வரைதான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த இலட்சங்கள் எளிதில் சேரும். சேமிப்பின் ஆற்றலை உங்கள் செலவுகளின்மீது உணருங்கள்.

ஒவ்வொரு மாரடைப்புக்குப் பின்னால், ஒவ்வொரு விபத்துக்கும் காரணமான மனக்குழப்பத்திற்குப் பின்னால், ஒவ்வொரு உறவுப் பிரிவுக்கும் பின்னால், ஊர்ப்பெயர்வு தேசப்பெயர்வு இடப்பெயர்வு அவமானம் தற்கொலை ஆகியவற்றுக்கும் பின்னால் நிச்சயமாக ‘ஒரு கடன் தொல்லை’ இருந்திருக்கிறது. அது சிறிதோ பெரிதோ - அவரவர் தகுதிக்கேற்ற துன்பச்சுமை. தொழிற்கடனையும் குடும்பக்கடன்களையும் ஒன்றாகப் பாவிக்காதீர்கள். இரண்டின் அளவீடுகளும் வெவ்வேறு. தொழிற்சாலைகளை இழுத்துப் பூட்டியபின் சேதாரமில்லாமல் வெளியேறுகின்றவர்கள் முதலாளிகள். முதற்கடனை வெற்றிகரமாகக் கையாண்ட மயக்கத்தில் அடுத்த கடனுக்கும் போகாதீர்கள். அடுத்தடுத்த ஒன்றில் வசமாகச் சிக்கிக்கொள்வீர்கள். சூடுபட்ட பூனையாகத் தள்ளியிருங்கள் !

இந்த நிமிடமே என் கடனைத் தீர்க்க முடியும் என்ற நிலையில் கடன் வாங்கலாம். எனக்கும் சிறிய வீட்டுக்கடன் உண்டு. வீட்டுக்கடன் என்றால் என்ன என்று உணர்வதற்காகவே அதை வாங்கினேன். அதுவே தவறு, மடத்தனம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆனால், அக்கடனை இந்த நிமிடம் என்னால் தீர்த்துக்கொள்ளவும் முடியும். எனக்குக் கடனட்டை இல்லை. கைப்பேசியொன்றைக் குறிப்பிட்ட வங்கிக் கடனட்டையைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாகப் பத்து விழுக்காடு தள்ளுபடி என்பதற்காக விளையாட்டுப்போல் கூட்டாளியின் கடனட்டையில் வாங்கிக்கொண்டேன்.

வேறு வழியே இல்லை என்றால் - நாம் பட்டுள்ள கடனை அந்தக் கணமே முறித்துக்கொள்ள முடியும் என்ற வலிமையான இடத்தில் நீங்கள் இருந்தால் - உங்கள் தேவைக்குச் சிறு பகுதியாக மட்டுமே கடன் வாங்குங்கள். அதை நீங்கள் நிர்வகிப்பீர்கள். வீட்டுக் கடனே என்றாலும் மூன்றில் ஒருபகுதிக்கு மட்டுமே கடன்படுங்கள். எண்பத்தைந்து விழுக்காடுவரை என்பதெல்லாம் வேண்டா. வளர்ந்த நாடுகளில் வீடுகள் என்பவை மதிப்பிழந்த சொத்துகள். சொல்வதற்கு இன்னும் ஓராயிரம் உள்ளன. பிறிதொரு நாள் மேலும் சொல்கிறேன். 

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் 
தன்கைத்தொன்று செய்வான் வினை - குன்றின்மீதிருந்து
 யானைப்போர் காண்பதைப்போன்றது நம் கையிலுள்ள 
பொருளைக்கொண்டு செய்கின்ற வினை. 

வாழ்த்துகள் !

வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள்
வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் 
“வன்புணர்ச்சி” என்பது, கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் ஒரு ஆண், பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதைக் குறிக்கும்.
1. அவளது விருப்பத்திற்கு விரோதமான உடலுறவு. செக்ஸ் ஊழியரான பெண்ணுடன், அவளது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வதுகூட கற்பழிப்புதான்;
2. கணவனைப் போல் பாசாங்கு செய்து ஒப்புதலைப் பெறுவது;
3. கொன்றுவிடுவதாக மிரட்டி ஒப்புதல் பெறுவது;
4. நாம் எதற்குச் சம்மதிக்கிறோம்? அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத 16 வயதிற்குக் குறைந்த பெண்ணிடம் சம்மதம் பெறுவது, அல்லது போதைப் பொருள் செலுத்தப்பட்ட நிலையில் அல்லது குடிவெறியில் சுயநினைவில்லாதபோது சம்மதம் பெறுவது அல்லது மனநோயாளிப் பெண்ணின் சம்மதம் பெறுவது;
5. மனைவி 15 வயதிற்குக் குறைந்த சிறுமியாக இருந்தால், அவளோடு உடலுறவு வைத்துக் கொள்வதும் வன்புணர்ச்சிக் குற்றமாகவே கருதப்படுகிறது.
6. நீதிமன்றக் கட்டளை, சம்பிரதாயம், சடங்குகள் காரணமாக கணவனும், மனைவியும் தனித்தனியாக வாழும்போது, கணவன் மனைவியின் சம்மதம் பெறாமல் உடலுறவு வைத்துக் கொள்வது கற்பழிப்புக் குற்றமாகும்.

வன்புணர்ச்சி நடந்ததும் என்ன செய்ய வேண்டும்?

1. தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கற்பழிப்பு நடந்ததை அந்தப் பெண் சொல்ல வேண்டும். அவருடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும். தாமதப்படுத்தினால். அவள் கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் அகன்று, “கற்பழிக்கப்பட்டது” என்ற குற்றத்தை அந்தப் பெண் நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும்.
2. கற்பழிக்கப்பட்ட பெண், உடனடியாகக் குளித்துவிடக்கூடாது. துணிகளையும் துவைக்கக் கூடாது. ஏனெனில், கற்பழிக்கப்பட்டது அவள் இருக்கும் நிலை, கற்பழிப்புக் குற்றத்திற்கு முக்கியமான சான்றாகும். அது மட்டுமல்ல; கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடையில் கற்பழித்தவனது ரத்தத் துளிகள் அல்லது ரோமம் இருக்கலாம். அவற்றைக் கொண்டு கற்பழிப்பில் ஈடுபட்டவனைப் பிடித்து விடமுடியும். அவனுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபித்துவிட முடியும்.
3. கற்பழித்தவர் செல்வாக்குள்ள நபராக இருந்தால், கற்பழிப்புச் சம்பவம் பற்றி முதலமைச்சர், மாநிலத் தலைமைப்போலீஸ் அதிகாரி, அப்பகுதி எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியாளருக்குக் கடிதங்களை அனுப்ப வேண்டும்.

காவல்துறையினரின் கடமைகள்:

1. காவல் நிலையத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரி, கற்பழிக்கப்பட்ட பெண் தரும் விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டு, அந்தப் பெண்ணிற்கு அதைப் படித்துக் காட்ட வேண்டும். அதில் ஒரு பிரதியை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தரவேண்டும். காவல்துறை அலுவலர் அந்தப் பெண்ணின் புகாரைப் பதிவு செய்து கொள்ள மறுத்துவிட்டால், அந்தப் பெண் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரையோ அல்லது உள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரையோ அணுக வேண்டும்.
2. காவல்துறையினர், அந்தப் பெண்ணை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று, உடற் கூறு சோதனை செய்ய வேண்டும். அந்தப் பெண்ணின் உடல் நிலை, அவளது மனநிலை ஆகியவை குறித்து மருத்துவர் அறிக்கைத் தருவார். இந்த அறிக்கை, கற்பழிப்பு குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு மிக முக்கியமானதாகும். மருத்துவர்தான் அந்தப் பெண்ணைச் சோதிக்க வெண்டும். காவல்துறையினர் தொடக்கூடாது. அருகாமையில் காவல் நிலையம் இல்லை என்றால், அந்தப் பெண், அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகி, உடற்சோதனை செய்து, அந்த அறிக்கையின் பிரதியொன்றை, தன் வசம் வைத்திருக்க வேண்டும்.
3. கற்பழிக்கப்பட்டவர் பெயரையோ அல்லது அதுபற்றிய விவரத்தையோ, காவல் துறையினர் வேறு எவரிடத்திலும் கூறக்கூடாது.

கற்பழிப்பிற்குத் தண்டனை:

கற்பழிப்புக் குற்றத்திற்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சில கற்பழிப்பு வழக்குகளில், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, நீதிமன்றம், ஆயுள் சிறை தண்டனையும் வழங்கும்.
கீழ்கண்ட வகையைச் சார்ந்த கற்பழிப்பு வழக்குகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது:
1. காவலில் இருக்கும்போது கற்பழிக்கப்பட்டால்;
2. கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணைக் கற்பழித்தவனுக்கு,
3. பனிரெண்டு வயதுக்குக் குறைந்த சிறுமி கற்பழிக்கப்பட்டால்,
4. ஒரு பெண் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை பல ஆண்கள் கூட்டாகச் சேர்ந்து கற்பழித்தால்;

வன்புணர்ச்சி வழக்குகளில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்:

1. நீதிமன்றங்களில் வன்புணர்ச்சி வழக்குகள் ரகசியமாக நடத்தப்படுகின்றன.
2. காவலில் பெண் கற்பழிக்கப்பட்டால், எடுத்துக்காட்டாக சிறைகளில் அல்லது மருத்துவமனையில் கற்பழிப்பு நடந்தால், குற்றம் சாட்டப்பட்ட நபர், தான் கற்பழிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமே தவிர, தான் கற்பழிக்கப்பட்டதாக அந்தப் பெண் நிரூபிக்கத் தேவையில்லை
3. தனது பொறுப்பில் இருக்கும் பெண்ணை, அந்த நபர் கற்பழித்தால், அந்தப் பெண் சம்மதம் கொடுத்திருந்தாலும் கற்பழித்த நபருக்குச் சிறைத் தண்டனை உண்டு.
4. தான் செய்வது என்னவென்று புரிந்து கொண்ட நிலையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபடும் 10 வயதுச் சிறுவனையும் தண்டிக்க முடியும்.
5. கற்பழிப்புக் குற்றம் நடப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உடந்தையாக இருந்த ஆண் அல்லது பெண், குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.



குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது” சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும் பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.

நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைது”தான்.


குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் – குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும், குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது” ஆகும்.

ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல், அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல் புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள்தான்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில் உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.

இதை தீர்க்கதரிசனத்துடன் கணித்திருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், இந்திய அரசியல் சட்டத்திலேயே கைதுகள் குறித்தும் எழுதியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்”.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது”.

ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும். இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில் இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.

எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள் குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும் தவிர்க்க முடியும்,

சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்:

இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.

எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.

சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.

கைது நடைமுறைகள்:

கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்”.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம்”. (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்”.

பெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும். எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும் கைது செய்யலாம்.

பொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால் அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

கைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும், உச்சநீதிமன்றமும் ஏற்படுத்தியுள்ளன.

Thanks to Karthik
ஒரு வழியா தமிழ்ல விக்கிபீடியா இருக்குன்னு கண்டுபுடிச்சு, அதுலையும் ஒரு 200 கட்டுரை உருவாக்கியாச்சு... இப்ப திடீர்னு ஒரு .யோசனை...  முன்னாடியே யாரவது சொல்லி இருந்தா இன்னும் ஒரு 100 கட்டுரையாவது எழுதியிருக்கலாமேனு.. சரி நமக்கு சொல்ல ஆளில்லை... ஒரு புத்தகமாவது வந்திருக்கலாம்ல அப்டின்னு யோசிச்ச போது.. தமிழ் விக்கிபீடியா பத்தி தேனி. எம். சுப்ரபமணி அண்ணன் எழுதுன புத்தகம் ஞாபகம் .வந்துச்சு.. அத எப்படி படிக்காம விட்டேன்.. மறுபடியும்  யோசிச்சா அது காசு கொடுத்து வாங்கனுமே அதான் படிக்கல...ஒரு வேளை  தெரிஞ்சிருந்தா வாங்கியிருக்கலாமே... சரி இப்போ எதுக்கு அதுலாம் யோசிக்கறேன்... விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.. அதுவே இலவசமா கிடைக்குது.. அத பத்தி தெரிஞ்சுக்கற புத்தகம் காசு கொடுத்து வாங்கனும்.. இங்க தான் நெருடல் ஆரம்பிக்குது... 

ஒரு முழு தமிழ் புத்தகம் எழுத என்னால முடியாது, அனால் ஒரு புத்தகத்த விக்கிய வெச்சு உருவாக்க முடியும்-நு தெரியும்.. கல்லூரியில் படிக்கும் போது எத்தன புத்தகம் விக்கியில இருந்து உருவாக்குனேனு எனக்கும் நான் பிரிண்ட் அடிச்ச கடைக்காரருக்கும் தான் தெரியும்.. 

சரி ஆரம்பிக்கறேன்... இன்னைக்கே.. .இப்போவே.. விரைவில் ஒரு தமிழ் விக்கிப்பீடியா புத்தகம்.. என்னோட தொகுப்புல.. ஏன்னா நான் தான் எழுதலையே.... 


Here you go with the English translation of above context. After a long period, I figured out the Tamil Wikipedia do exists. Once I found I started my contributions, done with 200th article creation but If I would have came to know about Tamil Wikipedia some time ago, I would have created 100 more articles. I thought why I didn't know about Tamil Wikipedia during those days, the first reason nobody is there to tell that Tamil Wiki do exists, the second reason I couldn't see the book about Tamil Wikipedia written by Theni. M. Subramani. I would have read it somehow If I came to know if that book exists or it might be the reason I would have left since I need to buy it from the local store.

As far as I know, Wikipedia is a free stuff, to know about it why should I pay for it ? Hence I decided to create a book which can be distributed for free online... I can't write such a big book but I can organize the content so that it looks like a book for beginners. I still remember how to create books using Wikipedia since I made hell loot of books from Wiki during my college days, only the shopkeeper knows the count of it.

Let me start the making of my Tamil Wiki book, today, just now.. Lets hope for a free book about Tamil Wikipedia, in Tamil coming soon, organised by me since am not going to write it down. :D

புத்தியை தீட்டு

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்.

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!
குக்கூ விமர்சனம் - Cuckoo vimarsanam


 ஒரு நல்ல சினிமா என்பது என்ன? அது எப்படி இருக்கவேண்டும் என நமக்கும் ஆயிரம் கேள்விகள் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை எதாவது ஒரு படம் வெளிவந்து நச்சென அதற்கு பதில் சொல்லும். ராஜூமுருகனின் இந்த குக்கூ அந்த ரகம்.

திரைக்கதை உத்திகளில் அடிக்கடி விவாதிக்கப்படும் ஒரு விசயம். ஒரு படத்தை வித்தியாசமாய் உருவாக்குவது எப்படி என்பது. வித்தியாசம் என்றால் எந்த அளவுக்கு வித்தியாசம்? எல்லாமே வித்தியாசமாகவா செய்வது ஒரு வழி. அதில் எடுத்துக்கொண்ட விசயத்திலிருந்து, காட்சிகளை கையாளும் முறை, பாத்திரப்படைப்பு, திரைக்கதை வடிவ அமைப்பு என எல்லாவற்றிலும் அசரடிப்பது. இன்னொரு வழி பழகிய விசயங்களை வித்தியாசமான கதாபாத்திரங்கள் அல்லது சூழல்களை கொண்டு உருவாக்குவது.

குக்கூ விமர்சனம்

ராஜுமுருகன் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் காலம் காலமாய் பார்த்துக்கொண்டிருக்கும் காதல்கதை தான் இது. ஆனால் கண்பார்வையற்ற கதாபாத்திரங்கள், அவர்களின் உலகம், அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள், ஒரு நாள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், நட்புகள், நெகிழ்ச்சிகள், வேதணைகள் என அட்டகாசமாய் காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

அதிலும் எந்த இடத்திலும் அவர்களின் நலன் காக்கும் பிரச்சாரங்கள் இல்லாமல், பாருங்கள் இவர்களின் பரிதாப நிலையை என பிச்சைப்பாத்திரம் ஏந்தாமல் அவர்களின் இயல்பான நக்கல், அன்பு, ஏக்கம் என காட்சிப்படுத்தியிருப்பதற்கு சபாஷ்.

நாம் தினமும் பார்த்தும் பார்க்காமல் செல்லும் ‘அவுட் ஆஃப் போகஸ்’ கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி நம்மை காசு குடுத்து இரண்டரை மணிநேரம் பார்த்து நெகிழ வைத்திருக்கிறார். அதிலும் முதல் படத்தில் என்பதால் அவர் தமிழின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராய் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டார். வாழ்த்துக்கள்.

குக்கூ

இத்தனை நேர்த்தியாய் எடுத்த படத்தில் திருஷ்டியாய் கடைசி காட்சிகளில் இருக்கும் வேகத்தடைகளும், புனேக்கு எப்படி வந்தார் கொடி என்ற குழப்பங்களும். தவிர்த்திருக்கலாமே.

அட்டகத்தி தினேஷ்! அந்தப் படம் வந்து சில வருடங்களாகி விட்டது. ஒரு படம் ஹிட்டானால் முதலில் வாய்ப்புகள் குவிவது கதாநாயகன், நாயகிக்குத்தான். ஆனால் அட்டக்கத்தி படம் எடுத்த தயாரிப்பாளரிலிருந்து, இசையமைப்பாளர் வரை அனைவரும் பல அடிகள் பலமாய் வைத்து முன்னேறிய நிலையில் இவர் மட்டும் அடுத்த படத்தில் கூட நடிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற பலமான கேள்வி பலருக்கும் இருந்தது. அதற்கு தக்க பதில்தான் இந்த படத்தில் அவர் காட்டியிருக்கும் நேர்த்தியான அட்டகாச நடிப்பு. கதாபாத்திரமாய் மாறுவது என்றால் என்ன என்பதற்கு இரண்டரை மணி நேர செய்முறை விளக்கம் குடுத்திருக்கிறார் தினேஷ். அதுவும் தன் இரண்டாவது படத்தில். தமிழ் சினிமாவின் இன்னொரு ராட்சச நடிகன் இவர்.

அறிமுக நடிகை மாளவிகா. அறிமுகம் என்ற சாயல் ஒரு ப்ரேமிலும் இல்லாத அளவுக்கு இந்த சாலஞ்சான ரோலில் காட்சிக்கு காட்சி நேர்த்தியாய் நடித்து அசத்தியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணின் இசை படத்துடன் இயல்பாய் பொருந்தி தாலாட்டுகிறது. இசைஞானியின் இசையை உயிரோட்டமாய் கொண்டிருக்கும் படத்தில் இன்னொரு இசையமைப்பாளர் வேலை செய்வதும், இசைஞானியின் இசை மென்மையையும், நுட்பத்தையும் தொடுவது என்பதும் சாதாரண காரியம் அல்ல. அந்த அசாதாரண வேலையை செய்திருக்கிறார் இவர். படத்துடன் அதன் தொணியுடன் ஒன்றி பாடல்களை அமைக்கும் இவரது நேர்மையும் நேர்த்தியும் நிச்சயம் பாராட்டக்கூடியது. மிக விரைவில் தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகி சாதித்திருக்கிறார்.

இந்த அணைத்து விசயங்களையும் சாத்தியப்படுத்திய இயக்குநர் ராஜுமுருகனுக்கே அத்தனை வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.தியேட்டருக்குள் செல்லும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் சென்றாலும் படம் முடிந்து வெளிவரும் போது எல்லார் கண்களிலும் ஒரு துளி கண்ணீரை கொண்டு வந்திருப்பதே இந்த படத்தின் நிஜமான வெற்றி. குக்கூ… பார்க்கவேண்டிய பரவசம்.
சூது கவ்வும் - திரை விமர்சனம்




கிட்நாப் பண்ணி பணத்தை சுருட்டும் த்ரில் டைப் கதையை ஜாலி கேலி ரூட்டில் கியர் தட்டி கலகலப்பூட்டும் ‘சூது கவ்வும்’.

யூட்யூப்-ல் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ‘நலன் குமரசாமி’க்கு இப்படம் வெள்ளித்திரையில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கிறது.
எவ்வளவோ படம் இதுவரைக்கும் பார்த்திருக்கோம்.... எல்லா படத்திலையும் காதல் பண்றவங்களுக்கு மத்தவங்களால வர்ற பிரச்னை பத்தி சொல்லியிருக்காங்க..

முதல் முறையா ஒரு படம் முழுக்க காதலிக்கரவங்களோட பிரச்சனையே அவங்க தான் அப்டீங்கறத ரொம்ப தைரியமா, சொல்லியிருக்குற படம்...
நீ தானே என் பொன் வசந்தம்...

நீ தானே  என் பொன் வசந்தம்


ஒரு பொண்ணு ஒரு பையன் லவ் பண்றாங்க.. அவங்களுக்குள நிறையா சண்டை, கடைசியா ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்கறாங்க... இவ்ளோ தான் ஸ்டோரி... 


தி கிராசுடு பின்கர்ஸ்


கிராசுடு பிங்கர்ஸ் என்ற ஒரு வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. அப்படிஎன்றால், நாம் எது எவ்வாறு நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ அது அவ்வாறே நடக்கும் என்பது ஆகும். அனால், இந்த உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் அவ்வாறு நடப்பதில்லை.

பேஸ் புக் இணையதளத்தில், மொபைல் மூலாமாக சேர்ந்தால் 50 ரூபாய் தருவதாக பேஸ் புக் இணையதளம் அறிவித்துள்ளது. இச்சலுகை இந்தியாவில் மட்டும் செல்லுபடியாகும் எனவும் அறிவித்ததுள்ளது. பயனர்களின் மொபைல் பயன்பாட்டினை அதிகரிக்க இவ்வாறு செய்துள்ளதாக பேஸ் புக் இணையதள உரிமையாளர்கள்  தெரிவித்துள்ளனர். 


Maatran Movie Review

இராமச்சந்திரன்க்ரா ஒரு விஞ்ஞானி, குழந்தைங்களோட வடிவத்த பத்தி ஆராய்ச்சி பண்றார். அவரோட மனைவி மேல அத சோதனையும் செய்றார், ஆனா அந்த முயற்சி தோழ்வி அடஞ்சிடுது. அதனால ஒரே இதயத்தோட ஒட்டிபிரக்கறாங்க ரெண்டு சூர்யாவும். (அகிலன் & விமலன்). அவங்க ரெண்டு போரையும் பிரிச்சா ஒருத்தர் இறந்துடுவாங்க, அதனால இராமச்சந்திரனோட மனைவி பிரிக்க மறுத்துடறாங்க. 


ENGLIஷ் VINGLIஷ்  விமர்சனம்

ஸ்ரீதேவி நடிச்சு ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்குற படம், அப்டி என்ன தான் இந்தப் படத்துல இருக்குன்னு பார்தடனும்நு ஒரு ஆசை; பார்த்தாச்சு. பெருசா கதைன்னு எதுவும் இல்ல, அது ஓரளவுக்கு ஓகே.. இங்க்லீஷ் தெரியாம கஷ்டபடுற ஒரு இந்திய குடும்பத்தலைவி தான் படத்தோட ஹீரோயின் , சஷி (ஸ்ரீதேவி). 


மதுபான கடை

என்ன ஒரு படங்க... எப்படி தான் இந்த படத்தை மிஸ் பண்ணினேன் அப்டீனே தெரியலீங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் (ஒரு செமஸ்டர் எக்ஸாம் தான் பாஸ் முடிஞ்சிருக்கு :( ) கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு  பார்த்த படம். அட நம்ம ஊரு (ஈரோடு - பெருந்துறை) நம்ம ஏரியா, அட போங்க பாஸ் எங்க காலேஜ் பொண்ணு தான் அது (ஒரு சீன்ல ஹீரோயீனே எங்க காலேஜ் நோட்ட எடுத்துகிட்டு வருவாங்க), இப்படி ஒரு படத்த எடுத்ததுக்கு கமலக்கண்ணனுக்கு ஒரு வாழ்த்துக்கள். சாரி பாஸ் ரொம்ப நாள் கழிச்சி தான் உங்க படத்த பார்க்க முடிஞ்சுது. 

வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்

தமிழ் பதிவுலகில் அவ்வப்போது கருத்து மோதல்கள் நடைபெறும். ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது மோசமான நிலையை அடைந்திருக்கிறது. அது போலி ஐடிக்களை உருவாக்கி அதன் மூலம் வைரஸ் உள்ள சுட்டியை பகிர்வது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.

ஏகப்பட்ட பரபரப்பைக் கிளப்பியபடி வெளியாகியிருக்கும் தாண்டவம், ஒரு வழக்கமான பழி வாங்கல் கதைதான். ஆனால் அதற்கு லண்டன் லொகேஷன், கலர் கலராக ஹீரோயின்கள், ஸ்டைலிஷ் மேக்கிங் என கோட்டிங் கொடுத்து, பார்க்க வைத்துவிடுகிறார் இயக்குநர் விஜய்.
ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்

  • அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது. 
  • அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்.
வணக்கம் நண்பர்களே..! முதலில் இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்...!


என்ன நடக்கிறது? ஏதாவது புரிகிறதா?  தொடர்ந்து இடுகையை வாசியுங்கள்..!!! முழுவதுமாக வாசியுங்கள்...!!! 

பிறகு மீண்டும் இந்த வீடியோவைப் பாருங்கள்...!!  உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறது? எண்ணங்களை எழுதுங்கள் கருத்துரையில்..! காத்திருக்கிறேன்.

சாதாரண பஸ்கண்டக்டர் முதல்... அணுவிஞ்ஞானி, ராக்கெட் விடும் வானவியல் அறிஞர்கள் வரை அனைவருக்கும் பயன்படுவது, பயன்படுத்தப்படுவது புதிய தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளுமே..!

சுப்ரமணியபுரம் எனும் உலக சினிமா மூலம் நல்ல இயக்குநராகவும், நாடோடிகள்-போராளி மூலம் நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்த சசிக்குமார், வழக்கமாக சமுத்திரக்கனி படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த சசிக்குமார், முதல்முறையாக வேறு இயக்குநர் இயக்கத்தில் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் ‘சுந்தரபாண்டியன்’. 

Sundarapandian Movie