விக்கிப்பீடியா

விக்கியை பல மொழிகளில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துபவன். மின்னணுவியல் மற்றும்தொலைத்தொடர்பு பொறியியலில்  இளங்கலை பட்டமும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில்மென்பொருட் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள நான், எனக்கு தெரிந்த, என்னை சுற்றியுள்ளவைகளை கட்டுரைகளாக மாற்ற என்னுடைய சிறிய பங்களிப்பு இருக்கும்; சில கட்டுரைகளை தொடங்கியும் உள்ளேன். விக்கிமூலம் திட்டத்தில் தற்போது அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன்.
  • 2009-ம் ஆண்டு முதன்முதலில் ஆங்கில விக்கியை பயன்படுத்த தொடங்கினேன், அப்போது தமிழில் விக்கிப்பீடியாஇருப்பது கூட தெரியாது :-(
  • 2010-ம் ஆண்டு ஆங்கில விக்கிப்பீடியாவில் முதல் தொகுத்தல் பணியை (மிகச் சிறிய மாற்றமே) தொடங்கினேன்
  • 2011-ம் ஆண்டு ஆங்கில விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்தேன், அதுவே விக்கியில் நானிட்ட பிள்ளையார் சுழி என்று கூட கூறலாம்
  • 2011-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிமூலத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்தேன், தெரியாதவைகளை பிற பயனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்
  • அதன்பிறகு, தமிழ் விக்கிமூலத்திற்கும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் இணைப்பை அறிந்து கொண்டேன், சிறிய சிறிய தொகுப்புகளை தமிழ் விக்கியிலும் செய்ய ஆரம்பித்தேன்
  • கட்டுரை தொடங்க அவா வந்தவுடன், சேவை உள்கட்டுமானம் என்ற கட்டுரையை தொடங்கினேன்; நோக்கியா 808 ப்யூர்வியூ கட்டுரை வரை சுமார் 25 கட்டுரைகளை சிறிய அளவிலேயே எழுதியிருந்தேன். பின்னர், 50-வது கட்டுரை சுனில் வரை ஓரளவு விரிவு படுத்தி கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன்
  • சைவ சமய இலக்கியத்திலுள்ள ஆர்வம் காரணமாக, அது பற்றிய கட்டுரைகளை விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் தொடங்கியுள்ளேன், என்னுடைய 75-வது கட்டுரையான எழுப்பெழுபது நூல் சற்று நம்பமுடியாத தகவலாயிருந்தும், தமிழர்களின் நாவன்மை குறித்து என்னை மிகவும் சிந்திக்க வைத்த நூல்
  • புதியதாக திட்டமொன்றைத் தொடங்கியிருக்கிறேன். உங்களால் எனக்கு உதவ முடியுமா? என்னுடைய பேச்சு பக்கத்தில் உங்கள் தகவலை பதியுங்கள்.
  • நூற்றைம்பது கட்டுரைகளை கடந்து சென்று கொண்டிருக்கும் நான், தற்பொழுது விக்கி துப்புரவு பணியிலும் அவ்வப்போது, கட்டுரை விரிவாக்கம், மொழிபெயர்ப்பு, மற்றும் புதிய கட்டுரைகளை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன் :D
நற்கீரன் கூறிய சில வரிகள்,
தமிழ் விக்கி நம்முடையது. நாம் ஏதேனும் செய்ய வேண்டுமென்ற உந்துதல்
என்னுடைய ஆர்வத்தை தூண்டியது, என்னைத் தொடர் பங்களிப்பாளராக மாற்றியது. தினமும் அன்றைய செய்திகளை மட்டுமில்லாமல், அன்றைய தினத்தின் சிறப்புகள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை எளிதில் விளக்கமாக, ஆதாரத்துடன் அறிந்து கொள்ள விக்கிப்பீடியா எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

விக்கிமீடியா திட்டத்தில் என் பங்களிப்பு..

No comments: