மதுபான கடை விமர்சனம் - Madhubana Kadai Tamil Film Review


மதுபான கடை

என்ன ஒரு படங்க... எப்படி தான் இந்த படத்தை மிஸ் பண்ணினேன் அப்டீனே தெரியலீங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் (ஒரு செமஸ்டர் எக்ஸாம் தான் பாஸ் முடிஞ்சிருக்கு :( ) கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு  பார்த்த படம். அட நம்ம ஊரு (ஈரோடு - பெருந்துறை) நம்ம ஏரியா, அட போங்க பாஸ் எங்க காலேஜ் பொண்ணு தான் அது (ஒரு சீன்ல ஹீரோயீனே எங்க காலேஜ் நோட்ட எடுத்துகிட்டு வருவாங்க), இப்படி ஒரு படத்த எடுத்ததுக்கு கமலக்கண்ணனுக்கு ஒரு வாழ்த்துக்கள். சாரி பாஸ் ரொம்ப நாள் கழிச்சி தான் உங்க படத்த பார்க்க முடிஞ்சுது. 
TASMAC

படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் டாஸ்மாக் தான் லொகேஷன். பரவாயில்ல பெருந்துறை இல இருக்குற ஒரு கடைய அப்டியே செட் போட்டிருக்கீங்க, நல்லா ஒரிஜினாலிட்டி கொறையாம இருந்துச்சு. ஒரு படத்துல எவ்ளோ  மெசேஜ சொல்ல முடியுமோ அவ்ளோ சொல்லியிருக்கீங்க. 

"மயிரு" இந்த ஒரு வார்த்தைய எவ்ளோ தடவ வருதுன்னு போட்டி வெக்கலாம். அப்புறம் டாஸ்மாக் வேலை செய்றவங்க, அந்த பாட்டி, சின்ன பையன், ரபீக், முருகேஷன், தண்டபாணி-நு எல்லோரும் கதையோட ரொம்ப ஒத்து போறாங்க. 
Madhubana Kadai Heroine

ஹீரோயின பத்தி ரெண்டு வரி சொல்லிக்கிறேன். ரொம்ப சின்ன பொண்ணு; அந்த முத்தக்காட்சி படத்துல ஒட்டல, தேவையில்லைன்னு தோணுது. அவரோட அப்பா கேரக்டர்,மூர்த்தி அவரோட பார்வையில பயமுருத்தியிருக்கார். 

பிச்சைக்கார பைத்தியமா வர்ற நிலத்தோட சொந்தக்காறர், ஒசிக்குடி, பீட்டர் விட்டு ஏமாத்திர பாத்திரம், பொட்டிக்கடை வேச்சிருக்கவர், மாமூல் வாங்குற போலீஸ், இவங்க எல்லாத்தையும் தூக்கி சாப்டிருக்கார் நம்ம பெட்டிசன் மணி; அவரு குடிச்சிட்டு பேசற ஒவ்வொரு விஷயமும் நச். 
Petition Mani - Madhubana Kadai

நல்ல வருவீங்க பாஸ் அது மட்டும் நல்லா தெரியுது. ஒரு சில எடத்துல ஒரு குறிப்பிட்ட சமூகம் செர்ந்தவர தாக்கர மாதிரி சீன்லாம் வெச்சுருக்கீங்க, அதுக்கு தைரியம் வேணும் பாராட்டுகள், ஆனா அத  கொரச்சிருந்தா இன்னும் படம் நல்லா இருந்திருக்கும். 

ஓவர் ஆளா ஒரு சூப்பர் படம், கண்டிப்பா குடிமகன்கள் குடம்பத்தோட பார்க்க வேண்டிய படம். ஒரு வேளை நீங்க சரக்கு கடைக்குள்ள போனதே இல்லையா (யாருக்கு தெரியாம வாங்கிட்டு வந்து ரகசியாம அடிக்ரவங்க, பிரண்ட்ச விட்டு வாங்கிட்டு வர சொல்லி குடிக்ரவங்க)  அப்ப நீங்கலும் இந்த படத்த ஒரு தடவையாவது பார்த்திடுங்க....!


You may also like

2 comments:

  1. meega sariyaana vimarsanam, ungalai pol naanum padathai romba naatkal kalithu thaan parkka mudinthathu. petition mani, chinrassu,ponraj characterkal abaaram. kodi kaal boothamada ... song ithayathai theendi thaan parthathu. climax thupuravu thozhilalar vasangal attakasam. melum sirantha padangalai yethirparkka thaan vendum iyakkunariundum irunthu

    ReplyDelete