எதிர்நீச்சல் - திரை விமர்சனம்

எதிர்நீச்சல்


தன்னுடைய பேரை நிலை நிறுத்தணும், மாரத்தான் போட்டியில தன் கோச்சுக்கு நடந்த சூழ்ச்சிய உடைக்க ஹீரோ போடும் ‘எதிர்நீச்சல்’.

அட! ஒரு பேர வெச்சு இவ்ளோ காமெடி பண்ண முடியுமா? அதைய சுத்தி இவ்ளோ அழகா திரைக்கதை நகர்த்த முடியுமா?னு அறிமுக இயக்கத்திலேயே ஆச்சர்ய பட வைக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ். துறை செந்தில்குமார்.


சும்மா நக்கலும், ஸ்டேண்ட் அப் காமெடிய மட்டுமே நம்பிட்டு இருந்த ஷிவகார்த்திகேயனுக்கு இதில் காமெடி, காதல், சென்டிமென்ட்னு ஆள் ரவுண்டராக ப்ரொமோட் ஆகறதுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஆளும் செம ஸ்மார்ட். பிரின்சிபல் ரூம்ல தப்பு தப்பா திருக்குறள் சொல்றதும், நேம் சேஞ் பண்ண நியூமராலஜிஸ்ட பார்க்க போறதும், இன்ஷூரன்ஸ் போடறதுக்கு வர சொன்னத, ப்ரோபோஸ் பண்ண வந்ததா நெனச்சுட்டு வலியுற இடத்துல எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார்.


ப்ரியா ஆனந்த் அழகிலும் சிரிப்பிலும் வசீகரிக்கிறார். லேடி கோச்-ஆக நந்திதா கொஞ்சம் சிடு மூஞ்சியாகவே இருக்கிறார். தெத்துப்பல் சிரிப்பு இதுல மிஸ்ஸிங்.

வழக்கமா காதலிக்கிற நண்பன் கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுகிற நண்பன் சந்தானம் கேரக்டருக்கு ரீப்லேஸா சதீஷ் செம கலகல.

ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல நல்லாவே நடிச்சு இருக்கார். ரொம்ப ஆச்சர்யமா இருந்தது நந்திதாவின் அப்பாவா வருபவரோட நடிப்பு. அவருடைய தோற்றத்திற்கு பெரிய வில்லனா வருவதற்கு வாய்ப்பு இருக்கு. அப்படிபட்ட உருவத்த வெச்சுட்டு வெகுளி தனமா நடந்துக்கிற இடங்களில் எல்லாம் சபாஷ் பெறுகிறார்.

மறுக்கப்படற திறமைக்கு வலி அதிகம், நீங்க சாப்பிடற சாப்பாட்ட தான் நாங்களும் சாப்படறோம் ஏழையா இருந்தாலும் எங்களுக்கும் கோபம் வரும், அந்த பக்கம் வந்தா ‘வீட்டுக்கு வா’னு சொன்னா அவ வீட்டுக்கு போறதுக்காகவே அந்த பக்கம் போனேன், வள்ளிக்கு நீ மாரத்தான்ல ஒடுவியானு சந்தேகம் கீதாவுக்கு நீ வள்ளி கூட ஓடிடுவியோனு சந்தேகம்னு கலகல வசனங்களிலும் ஈர்க்கிறார் துறை செந்தில்குமார்.


இசை அனிருத் பாடல்கள் இந்த வருட டாப் 10க்கு தகுதி பெறுகிறது. பாடலுக்கான விஷுவல்சும் செம. படத்துல பின்னணி இசைக்காக மெனக்கெட்டு இருக்கிறார். கடைசி பத்து நிமிஷம் வெரி இம்ப்ரசிவ். ப்ளேஷ்பேக் முடிஞ்சு ‘எதிர் நீச்சலடி’னு தீம் வரும் போது ஆடியன்ஸ் பல்ஸ் எகிறுது.

வேல்ராஜின் ஒளிப்பதிவு ஜில் ஜில்.

ஏற்கனவே பார்த்து பழகிய பிளேஷ்பேக் தான், இந்த மாதிரி பிளேஷ்பேக்ல எப்படியும் இப்படி தான் நடக்கும், அதுதான் திரைக்கதையின் நியதிங்கிறது பரிட்சயமான விஷயம்தான். எப்படியும் ஹீரோதான் ஜெயிப்பார்னு தெரிந்தாலும் , அதையும் தாண்டி நம்மள கட்டிப்போடற மேஜிக் தான் படத்தின் பலம்.


எதிர் நீச்சல் – எ ரியல் சம்மர் ஸ்பெஷல்.


நன்றி: உன்னைப்போல் ஒருவன் 


You may also like

No comments: