தமிழ் பதிவுலகில் அவ்வப்போது கருத்து மோதல்கள் நடைபெறும். ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது மோசமான நிலையை அடைந்திருக்கிறது. அது போலி ஐடிக்களை உருவாக்கி அதன் மூலம் வைரஸ் உள்ள சுட்டியை பகிர்வது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.
சமீபத்தில் நண்பர் சதீஷ் செல்லத்துரை அவர்களின் மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் என்ற பதிவில் வருன் என்ற (போலி) பெயரில் ஒருவன் பின்னூட்டம் இட்டிருந்தான். அந்த பின்னூட்டத்தில் அவனது பெயரை கிளிக் செய்தால் http://tiny.cc/ibJUN என்ற முகவரிக்கு சென்று, பிறகு வேறொரு முகவரிக்கு செல்லும்.
இந்த முகவரியை கூகிளில் தேடிய போது இது பற்றிய தகவல்கள் கிடைத்தது. இது "exploit" என்னும் ஜாவா ஸ்க்ரிப்ட் நிரலியாகும். இதன் மூலம் எண்ணற்றEmail Windows திறந்துக் கொண்டே இருக்கும். இதன் மூலம் உங்கள் கணினியின் RAM நிறைந்து ஹேங் (Hang) ஆகிவிடும்.
அப்படி ஏற்பட்டால் நீங்கள் உடனே கணினியை Restart செய்ய வேண்டும். பிறகு CCleaner மென்பொருளை பயன்படுத்தி கணினியை சுத்தப்படுத்துங்கள்.
இந்த வைரஸ் முகவரியை பரப்பும் சிலர் போலி ஐடிக்களை உருவாக்கி பரப்புகின்றனர். உதாரணத்திற்கு ஒன்று கீழே,
உம்மத் என்ற பெயரில் இருப்பது போலி ப்ரொபைல். அந்த பின்னூட்டத்தில் "மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள்" என்ற பெயரில் ஒரு சுட்டி இருக்கிறது. ஆனால் உண்மையில் அது நண்பர் சதீஷ் செல்லத்துரை அவர்களின் பதிவிற்கான சுட்டி இல்லை. இடதுபுறம் பாருங்கள். அது அந்த வைரஸ் உள்ள முகவரி.
எப்போதும் சுட்டிகளை கிளிக் செய்வதற்கு முன் அதன் மீது கர்சரை நகர்த்துங்கள். இடதுபுறம் கீழே அந்த சுட்டியின் உண்மையான முகவரி காட்டும். அதை பார்த்த பிறகு கிளிக் செய்யுங்கள்.
இது இந்த ஒரு தளத்தில் மட்டுமல்ல, நேற்றிலிருந்து வேறு சில தளங்களிலும் இதே போல் பரப்புகிறார்கள். உங்கள் பதிவுகளில் இது போன்ற பின்னூட்டங்கள் வந்தால் நீக்கிவிடவும்.
வாசகர்கள் இது போன்ற ஏமாற்று வேலைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும். கடைசியாக ஒன்று,
"போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்"
டிஸ்கி: இந்த வைரஸ் முகவரி தற்போது சில தமிழ் பதிவர்கள் பரப்பினாலும், இதனை வேறு யாரோ எப்போதோ உருவாக்கியுள்ளார்கள். இந்த வைரஸ் முகவரியைப் பற்றி நேற்று tiny.cc தளத்தில் புகார் அளித்திருந்தேன். தற்போது அந்த முகவரியை செயல்நீக்கம் செய்துவிட்டார்கள். ஆனால் வேறு முகவரியில் இந்த வைரசை பரப்ப வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.