மாற்றான் - எதிர் பார்த்த மாற்றமில்லை....! - மாற்றான் விமர்சனம்

Maatran Movie Review

இராமச்சந்திரன்க்ரா ஒரு விஞ்ஞானி, குழந்தைங்களோட வடிவத்த பத்தி ஆராய்ச்சி பண்றார். அவரோட மனைவி மேல அத சோதனையும் செய்றார், ஆனா அந்த முயற்சி தோழ்வி அடஞ்சிடுது. அதனால ஒரே இதயத்தோட ஒட்டிபிரக்கறாங்க ரெண்டு சூர்யாவும். (அகிலன் & விமலன்). அவங்க ரெண்டு போரையும் பிரிச்சா ஒருத்தர் இறந்துடுவாங்க, அதனால இராமச்சந்திரனோட மனைவி பிரிக்க மறுத்துடறாங்க. 

அதுக்குள்ளே இராமச்சந்திரனோட திட்டம் நிராகரிக்கப்படுது. அதுக்கப்றம், அவரு கஷ்டப்பட்டு பால் பவுடர் (Energion) தயாரிக்க அது கிளிக் ஆயிடுது. 

அதுக்கப்றம் நடக்கறது தான் மெயின் ஸ்டோரி. அகிலனாவும், விமலனாவும் நடிச்சிருக்காரு சூர்யா, ரெண்டு பேறும் ஒட்டியே இருந்தாலும், ரெண்டு பேருக்கும் வேற வேற டேஸ்ட்டு (இஸ்டக் ஆண் யூ கதை தான் கொஞ்சம்), அவங்க வாழ்க்கையில அஞ்சலி (காஜல் அகர்வால்) வராங்க, ரெண்டு பேருக்குமே காஜல் மேல ஆசை, அனால் காஜல் விமலனத்தான் விரும்பறாங்க.


ஒரு கட்டத்தில் விமலனுக்கு (ஒரு ரஷிய நிருபர் மூலமாக) (Energion) பால் பவுடரில் கலப்படம் இருப்பது தெரிய வருகிறது, அது பிற்காலத்தில் மிகப்பெரிய விளைவை உருவாக்கும்; இந்தியாவின் வருங்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை கண்டு பிடிக்கிறார். அதன் பிறகு இதை பற்றி தெரிந்து கொள்ள முயலும் பொது, நிருபர் கொல்லப்படுகிறார். யார் இதையெல்லாம் செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்க ரஷியா செல்கிறார், அங்கு பிரச்சனை மேலும் பெரிதாகிறது, அதன் பிறகு என்ன நடந்தது என்று சொல்லியிருக்கிறார் ஆனந்த்.

மாற்றான் சூர்யாவுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் எதிர் பார்த்த மாற்றமில்லை ...!


You may also like

No comments: