ENGLIஷ் VINGLIஷ் விமர்சனம்


ENGLIஷ் VINGLIஷ்  விமர்சனம்

ஸ்ரீதேவி நடிச்சு ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்குற படம், அப்டி என்ன தான் இந்தப் படத்துல இருக்குன்னு பார்தடனும்நு ஒரு ஆசை; பார்த்தாச்சு. பெருசா கதைன்னு எதுவும் இல்ல, அது ஓரளவுக்கு ஓகே.. இங்க்லீஷ் தெரியாம கஷ்டபடுற ஒரு இந்திய குடும்பத்தலைவி தான் படத்தோட ஹீரோயின் , சஷி (ஸ்ரீதேவி). 

அவங்களுக்கு இங்க்லீஷ் தெரியல அப்டீங்கறத குத்திக்காட்ட ஒரு பொண்ணு, அவங்களுக்கு புரியற மாதிரி சின்ன சின்ன இங்கிலீஷ் பேசற துரு துரு பையன், அவங்க பண்ற லட்டுக்காகவே கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு புருஷன்.

தன்னோட அக்கா பொண்ணோட கல்யாணத்துக்காக, நியூயார்க் போற நம்ம ஸ்ரீதேவி நாலு வாரத்துல இங்க்லீஷ் கத்துக்கலாம்னு போடற விளம்பரத்த பார்த்துட்டு யாருக்கும் தெரியாம சேர்ந்து படிக்கறாங்க. அவங்கள மாதிரியே இங்கிலீஷ் தெரியாம கஷ்டப்படுற வெளிநாட்டுக்காராங்களையும் சந்திக்கறாங்க. 


English Vinglish Review Tamil

ஒரு கட்டத்துல ஸ்ரீதேவியோட குடும்பம் இந்தியாவுல இருந்து வருது, எப்படி அவங்கள சமாளிச்சுட்டுப் போறாங்க, அதனால என்ன என்ன பிரச்னை வருது. கடைசியா என்ன தான் ஆச்சின்னு ஏகப்பட்ட இங்க்லிசோட சொல்லியிருக்காங்க.

இயக்குனர (கவுரி சிண்டே) பாரட்டியாகனும், ஒரு நடுத்தர குடும்பத்தலைவிய கதாநாயிகியா அக்னதுக்கு, அவங்க பிரச்சனைய மக்களுக்கு சொன்னதுக்கு. இதுல ஒரு கட்டத்துல ஸ்ரீதேவி, "நீங்க ஏன் இங்கிலீஷ் தெரிஞ்ச மாடர்ன் பொண்ண கல்யாணம் பண்ணியிருக்க கூடாது" அப்டீன்னு அவங்க புருஷன கேட்பாங்க, அப்புறம் கடைசியா ஸ்ரீதேவி இங்க்ளிஷ்ல பேசுநதுக்கப்ரம், "என்ன உனக்கு இப்பவும் புடிச்சிருக்கா" அப்டீன்னு கேட்கறாரு...

இங்க்லீஷ் விங்க்ளிஷ் விமர்சனம்

படம் முடியறப்ப, " நம்மள நாமலே நேசிக்கலைனா, நம்மள சுத்தியிருக்குற எதுவுமே நமக்கு புடிக்காது. அதுவே நம்மள நாமலே நேசிக்க ஆரம்பிச்சா நம்மள சுத்தியிருக்குற அதே உலகம் புதுசா தெரியும். புடிக்கவும் ஆரம்பிக்கும்" டைலாக் நல்லா வந்திருக்கு. 

Ajith done cameo in English Vinglish

ஒரு நாலு நிமிஷம் அஜித் வந்துட்டு போறார். அந்த நாலு நிமிஷமும் நச். வழக்கமான காதல் கதை இல்ல ஆனால் ஒரு தலைக்காதல் இருக்கு. அப்புறம், ஒரு வேளை உங்களுக்கு இங்கிலீஷ் தெரியலைனா பர்ஸ்ட் ஹாபோட வீட்டுக்கு போயிடறது நல்லது, என்ன படத்துல ஹீரோயினுக்கு மட்டும் தான் இங்கிலீஷ் நல்ல தெரியாது, மத்த எல்லோரு பின்றாங்க. முடிஞ்சா ஒரு டிக்சனரி ஓட படம் பாருங்க... ;-)


You may also like

1 comment: