என் முதல் விமான பயணம்

ரொம்ப நாளா விமானத்துல போகணும்னு யோசிச்சு யோசிச்சு ஒரு வழியா இந்த தடவ சென்னை-ல  இருந்து பெங்களூருக்கு விமானத்துல போகலாம்னு முடிவு பண்ணினேன். IRCTC-குள்ள புகுந்து விலை கம்மியா  ஏத்த நேரத்துல போற மாதிரி தேடி spicejet விமானத்த கண்டுபுடிச்சேன்... 

என் முதல் விமான பயணம்
என் முதல் விமான பயணம்
திங்கட்கிழமை காலையில 7.30 மணிக்கு சென்னைல  இருந்து கெளம்புற விமானத்துல எனக்கு ஒரு எடம் போட்டுக்கிட்டேன்.. IRCTC இ -மெயில் கொடுத்தேன் வயச கூட கேட்கல... ஜன்னலோரமா உட்கார  இடம் கிடைக்கணும்நு நினைச்சு தேடுனேன்... சீட் நம்பர் கூட வரல... :'(

அப்றமா வழக்கமா விமானத்துல போற ஒரு தோழருக்கு அலைபேசில கூப்ட்டு கேட்டேன்.. அவரு சொன்னாரு.. விமானம் கெளம்புற முன்னாடி தான் உனக்கு உட்கார இடம் தருவாங்க அவசர பட வேணாம்னு...

ஒரு வழியா திங்கட் கிழமை வந்துச்சு.. காலையில 4 மணிக்கு எழுந்து குளிச்சுட்டு.. சும்மா ஜம்முன்னு  புதுத்துணி போட்டுகிட்டு அப்டியே நுங்கம்பாக்கம் ரயில்வே  ஸ்டேசனுக்கு போயி திரிசூலத்துக்கு டிக்கட் வாங்குனேன் (5 ரூபா தான்).. 

எவ்ளோ பெரிய விமானம்... எப்டியாவது ஜன்னலோர  சீட் புடிச்சுட வேண்டியது தான் அப்டின்னு மனசுல கனவு கண்டுட்டு போனேன்... திடீர்னு ஒரு சந்தேகம்... திரிசூலத்துல இறங்கணுமா இல்ல... மீனம்பாக்கத்துலையா... எப்ப பேப்பர் படிச்சாலும்.. மீனம்பாக்கம் விமான நிலையம்னு தான வரும்... 

அப்றமா மொபைல்-ல மேப் ஆன் பண்ணி... சென்னை விமான நிலையத்த தேடினேன்... ஒருவழியா "உள்நாட்டு விமான நிலையம்" திரிசூலம் பக்கத்துல காட்டுச்சு.. அப்பாடா-நு ஒரு  பெருமூச்சு விட்டேன்....

ஒருவழியா வாசல தேடி கண்டுபுடிச்சு... உள்ள போனேன்... 2-வது மாடியில spicejet அலுவலகம் இருக்குன்னு ஒருத்தர் சொன்னத கேட்டு... வேக வேகமா போனேன்... அங்க போயி ..கேட்டா. போர்டிங் பாஸ் வாங்க உள்ள போங்கன்னு சொல்லிட்டாங்க..

ஹேண்ட் லக்கேஜ்க்கு செக்கிங் தேவை இல்லைன்னு சொல்லி போர்டிங் பாஸ் வாங்கற எடத்துக்கு அனுப்புனாங்க.. 

அங்க போயி எங்கிட்ட  இருந்த டிக்கெட் பேபர்ர கொடுத்தேன்.அதவாங்கி பார்த்துட்டு பயபுள்ள ஒரிஜினல் டிக்கட் கொடுத்துட்டு ஏதோ ஹிந்தியில சொல்லுச்சு..

ஒரிஜினல் டிக்கட்
ஒரிஜினல் விமான டிக்கட்

உள்ள போனா அவ்ளோ கூட்டம்.. ஏதோ சந்தை மாதிரி... ஒரு வழியா வரிசைல நின்னு முன்னாடி போனா.. பயங்கரமான சோதனை.. ஒரு கருவி அதுக்கப்றம்  ஒரு காவல் அதிகாரி... அப்றமா என்னோட "H4" கேட் போற வழிய காட்டினாங்க...

அங்க போயி உட்கார்ந்ததும்.. ஒரு டிக்கட் பரிசோதகர் என்னோட  டிக்கட்ட வாங்கி அவரோட மெசின்ல ஏதோ பண்ணிட்டு ஒரு பஸ்ல போயி ஏற  சொன்னாரு... அது நான் போக வேண்டிய 3145 விமானத்தோட கதவுக்கு பக்கமா  கொண்டுபோயி விட்டுச்சு...

Spice Jet
Spice  Jet 
பார்க்கறதுக்கு சின்னதா இருந்துச்சு...  2 டேங்கர் லாரி ஒன்ன நின்னா இது சிறுசாயிடும் அவ்ளோ சின்னது.. சரி நம்ம கொடுத்த காசுக்கு இதுதான் வரும்-நு நினச்சு கிட்டு ஏறினேன்...


80 பேரு உட்காறலாம்
80 பேரு உட்காறலாம் 

மொத்தமா ஒரு 80 பேரு உட்காறலாம் 20 x 4... ஒரு வரிசையில 2 ஜன்னல் சீட்டு... எங்க உட்கார்ந்தாலும் வெளிய இருக்கறது தெரியுது... நல்லவேளை  என்னோடது 16C சீட் .. இறக்கைய தாண்டி இருந்தது... எனக்கு பின்னாடி ஒரு 4 வரிசை...

கொஞ்ச நேரத்துல இரண்டு ஏர் ஹோஸ்டஸ் வந்தாங்க... நல்லா புள் மேக் அப்... செகப்பு கலர் துணி...

ஏர் ஹோஸ்டஸ்
ஏர் ஹோஸ்டஸ்

அவங்கள அறிமுகப்படுத்திக்கிட்டாங்கா.... சீட் பெல்ட்  போட சொன்னாங்க.. 
தண்ணீர் கொடுத்தாங்க... ஜூஸ் கூட இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா கண்ணுல காட்டல. அப்புறம் மொபைல், எலக்ட்ரானிக் பொருள் எல்லாத்தையும் ஆப் பண்ண சொன்னாங்க... ஹிந்தி அப்புறம் இங்க்லீஷ் மட்டும் தான் பேசுனாங்க... அவங்களும் அவங்க சீட்டுக்கு .போயிட்டாங்க..

விமானம் அப்டியே நகர .ஆரம்பிச்சுது.. மெதுவா நகர ஆரம்பிச்சு... (ஒரு 30-50 கி.மீ. வேகம்) அப்டியே  போய்  ஒரு வரிசையில் நின்னுச்சு.. சரியா 5 நிமிஷம் கழிச்சு 7.35க்கு கொஞ்சமா நகந்துச்சு. 60, 70, 80, 100, 140, அப்டியே  பயங்கர வேகம்... 

ஒரு ரெண்டு நிமிசதுள்ள அப்டியே மேல நோக்கி பறந்துச்சு... ஆகாசத்துல பறக்றதுன்னா என்ன-நு அப்பத்தான் புரிஞ்சுது... ஒரு 5 நிமிசத்துல நேரா போக ஆரம்பிச்சுது... ஜன்னல் ஓரத்துல பார்த்தேன்... கூகிள்  மேப்ல  பார்க்கற மாறி இருந்துச்சு..

பைலட்  பேசுனாரு.. எவ்ளோ நேரத்துல போவோம். எவ்ளோ ஒயரத்துல இருக்கறோம் எல்லாம் சொன்னாரு.. 

கொஞ்சமா கூட பயமே வரல... அப்றம் ஏர் ஹோஸ்டஸ் வந்தாங்க, சீட் பெல்ட்  கலட்டிகலாம்.. போன் airplane mode-ல வெச்சுக்கலாம்  அப்டின்னு சொல்லிட்டு... ஒரு ஐஸ்  வண்டி கொண்டுவந்தாங்க... அதுல சாப்பாடு தண்ணி எல்லாம் இருந்துச்சு... ஒரு ஒரு பேரா படிச்சு உங்களுக்கு அது வேணுமா இது வேணும்மானு  கேட்டுட்டே போனாங்க.. கொஞ்சம் நேரம் கழிச்சு குப்ப போட ஒரு கவர் கொண்டு வந்தாங்க...

ஒரு 20-30 நிமிஷம் சூப்பர்-ஆ  இருந்துச்சு... 

ஆகாசத்துல பறக்றது
ஆகாசத்துல பறக்றது


மறுபடியும் சீட் பெல்ட் போட சொன்னாங்க... தரை  எறங்க போறோம்னு சொன்னாங்க... மறுபடியும் எலக்ட்ரானிக் பொருள் எல்லாத்தையும் சுவிட்ச் ஆப் பண்ண  சொன்னாங்க... கீழ எறங்கும் போது சூப்பர்.. லேசான தூறல்... மேகமூட்டம்... மெதுவா கீழ  இறங்குச்சு...

கீழ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சு சீட் பெல்ட் கலுட்டிக்கலாம்-நு சொன்னாங்க... ஒரு பத்து நிமிசத்துல இறங்கிக்கலாம் சொன்னங்க.. வெளிய வரும் போது தேங்க்ஸ் சொன்னாங்க. இந்த கதை இன்னும் முடியல... அடுத்த பதிவுல மீதிய சொல்றேன்...


You may also like

2 comments: