எவ்வளவோ படம் இதுவரைக்கும் பார்த்திருக்கோம்.... எல்லா படத்திலையும் காதல் பண்றவங்களுக்கு மத்தவங்களால வர்ற பிரச்னை பத்தி சொல்லியிருக்காங்க..
முதல் முறையா ஒரு படம் முழுக்க காதலிக்கரவங்களோட பிரச்சனையே அவங்க தான் அப்டீங்கறத ரொம்ப தைரியமா, சொல்லியிருக்குற படம்...
நீ தானே என் பொன் வசந்தம்...

ஒரு பொண்ணு ஒரு பையன் லவ் பண்றாங்க.. அவங்களுக்குள நிறையா சண்டை, கடைசியா ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்கறாங்க... இவ்ளோ தான் ஸ்டோரி...
படத்ததோட விமர்சனம்-ங்கிற பேர்ல படம் நல்ல இல்ல அப்டீன்னு கொஞ்சம் பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட எல்லாம் நான் கேட்கிற ஒரே ஒரு விஷயம் உண்மைய சொன்னா ஏங்க பாஸ் ஒத்துக்க மாட்டீங்கிறங்க???
ஒரு பெரிய மைனஸ், சமந்தாவுக்கு அழுகையே வரல :-(
சில வசனங்கள்:
1. லவ் பண்றப்ப எல்லா சாங்க்ஸும் நமக்காகவே எழுதுன மாதிரியே இருக்குது இல்ல?
ஆமாமா . இன்க்ளூடிங்க் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு
2. டேய் , நிஜமா அவ செம ஃபிகர்டா. இப்படி ஒரு ஃபிகரை நான் பார்த்ததே இல்லை
விட்ரா மச்சான், எனக்கு எல்லா பொண்னுங்களூமே செம ஃபிகராத்தான் தெரியுது. ஏன்னா நான் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல்
3. லாரிக்குக்கீழே விழுந்தவனைக்கூட காப்பாத்திடலாம், ஆனா லவ்வுல விழுந்தவனைக்காப்பாத்தவே முடியாது
4. அவ கிட்டே என்னடா பேசறது?
ரேஷன்ல பாமாயில் ஊத்தறாங்க , வா 2 பேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு கூப்பிடு
5. சில பசங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்கன்னு நம்ம பேரண்ட்ஸ் சொல்வாங்களே, அவன் தான் அது
6. ஏற்காடு போறேன், நீ அங்கே போய் இருக்கியா?
நோ
அடடா, வாட் எ பிளேஸ்... சரி நீ எங்கே போகப்போறே?
ஆஸ்திரேலியா
7. எனக்காக சந்தோஷமா இருக்கறது மாதிரி அட்லீஸ்ட் நடிக்காத
8. அவன் அடிக்கற மொக்கை ஜோக்குக்கெல்லாம் ஏன் சிரிக்கறே? நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ சிரிக்கனும்
9. மாப்பி , கத்திரிப்பூ கலர்ல கேவலமா ஒரு சர்ட் வெச்சிருப்பியே அதை போட்டுட்டுப்போகலையே?

10. சந்தானம் - ஏண்டி, உங்களை எல்லாம் சமாளிக்க நான் ஒருத்தன் போதாதா?
வாட்?
எல்லாரையும் சேர்த்துப்போட
மை திங்க்.....
வாட்? திங்க்?
என்ன? எல்லாமே டபுள் மீனிங்க்ல வருது? ( இது கவுண்டமணியின் காமெடி உல்டா )
11. ப்ளீஸ், நீ வடையை பிராக்டீஸ் பண்ணு, இதுல தலையிடாத, நீ தின்னத்தான் லாயக்கு
12. நீ ஏதாவது சொல்லனுமா? நான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்
அதான் இப்போ சொன்னேனே?
ஒண்ணும் சொல்லலையே?
கிஸ் அடிச்சேனே?
13. வாடா வா, சுடிதார்ங்க காய விட்ட பின்னாலதான் உங்களுக்கெல்லாம் பேண்ட் சர்ட் கண்ணுக்குத்தெரியுமே?
14. கரண்ட் பில்லுல அதுக்கு வெச்சிருந்த பணத்துல தண்ணி அடிச்சுட்டேன்
15. அண்ணனுக்கு பெண் பார்க்க நான் வர்லை, அந்தப்பொண்ணு திடு திப்னு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா?
16. என் கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா?
ம்ஹூம்
முடி வெட்டி இருக்கேன்
ஓஹோ சரி
சுத்தம்
17. நான் எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன்
இதானா? நான் கூட ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினைச்சேன்
அப்போ நான் படிக்கறது சீரியஸ் மேட்டர் இல்லையா?
18. உன் நல்லதுக்கும் என் நல்லதுக்கும், நம்ம நல்லதுக்கும் ஒண்னே ஒண்னு சொல்றேன் , கேட்கறியா?
ம்
என்னை விட்டுடு

19. நான் வேணா உனக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கித்தர்றேன் , என்னை தயவு செஞ்சு தம்பின்னு கூப்பிடாதே, ஏன்னா ஹாஸ்பிடல் நர்சைக்கூட சிஸ்டர்னு கூப்பிட்டதில்லை
20. அப்பாவை வருத்தப்பட வெச்சுட்டேன், அதான் வருத்தமா இருக்கு
21. இங்கே என்ன தோணுதோ அதை பேசு
இதே டயலாக்கை இன்னும் எத்தனை படத்துல சொல்வே?
22. இந்தப்பொம்பளைங்க இருக்காளுங்களே 2 மணி நேரப்படம் பார்க்க 3 மணி நேரம் மேக்கப் போடுவாளுங்க... (கண்டிப்பா என் கூட படம் பார்க்க வந்தவங்கள சொல்லல..)
23. ஏண்டா , நீ மட்டும் இறங்கி வந்துட்டே, நீயும் ஈகோல அவளை செர்த்தான் போடினு சொல்லி இருக்கலாமே?
சொல்லி இருக்கலாம், அப்புறம் காலம் பூரா கைல பிடிச்சுக்கிடு உக்காந்திருக்கனும்
24. கரண்ட் கட் கூட முன் கூட்டியே சொல்லிட்டு கட் பண்றாங்க, ஆனா இந்த கன்னிப்பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம காதலை கட் பண்ணிருவாளுங்க
25. எப்படியும் அவ சமாதானம் ஆக 10 நாள் ஆகும் போல
20 நாள் ஆனாலும் சரி பரவாயில்லை
டேய் நாம என்ன டூரா வந்திருக்கோம்?
26. நீ என்னை வெறுத்துடக்கூடாது
அது முடியாது, ஐ ஹேட் யூ
27. குட்பை சொல்லிட்டு வந்துட்டேன்
குட்பை சொல்ல முடிஞ்சுதா?
28. ஈசியா அழ முடியுதேன்னு அழுதுட்டே இருக்காதே
29. இதுக்கு தான் டியுஷன் போக வேண்டாம்னு சொன்னியா
30. இப்ப உன்னோட லிஸ்ட்ல படிப்பு, வேலை, டிக் பண்ணிட்ட, அடுத்தது என்ன வருண் கல்யாணமா இல்ல நித்யாவா, வருண்...?

காதலர்கள், யூத், பிரிந்து வாழும் தம்பதிகள், காதல் பண்ணலாம்னு நெனைக்கிறவங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். இளையராஜா ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாத படம்.
தமிழ் சினிமாவுல வழக்கமா வர்ற ஸ்டோரியா இல்லாம வேற மாதிரி எடுத்ததுக்காக கவுதம் சார் கங்க்ராட்ஸ்....!
its nice movie
ReplyDeletesanthanm comdy is super
Thanks vijay for your comments. Really Santhanam comedy is super especially his encounter dialogues and VTV comedy.
Deletesuper review for super movie :)
ReplyDeleteThanks for the comments Praveenraj :)
Deletevery nice film...
ReplyDeleteYes, Really very nice film. Thanks for the comments Abarna :-)
DeleteIts not a normal flim its a real LOVE&LIFE story .just feel the love &congrats the goutham's ability
ReplyDeletePerfect Ajesh... you need to feel the love.... What a film from Goutham Menon..
Deletethose who r realy love u r girl or boy dont miss that goutham creation (NETHANE EN PONVASANTHAM
ReplyDeleteNot Just only to lovers, those planned to love also must watch movie...
Deleteபாஸ், விமர்சனம்னு போட்டுட்டு கடைசி வரை விமர்சனமே இல்லையே... :)
ReplyDeleteஹி ஹி ஹி ... படம் அவ்ளோ சூப்பர் , நிறைய நெகடிவ் லிஸ்ட் கொடுத்துட்டாங்க... அதனால பாசிட்டிவான விஷயம் மட்டும் கொடுத்து இருக்கேன்... யார் கிட்டயும் சொல்லிடாதீங்க .... ;-)
Delete