Friday, October 19, 2012

கிராசுடு பிங்கர்ஸ்


தி கிராசுடு பின்கர்ஸ்


கிராசுடு பிங்கர்ஸ் என்ற ஒரு வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. அப்படிஎன்றால், நாம் எது எவ்வாறு நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ அது அவ்வாறே நடக்கும் என்பது ஆகும். அனால், இந்த உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் அவ்வாறு நடப்பதில்லை.

இன்று காலையில் இருந்து மகிழ்ச்சியாய் இருந்தேன், மதியத்தில் இருந்து தொடர்ந்து கெட்ட செய்திகளும் சில தவறான விஷயங்களுமே நடந்து வருகின்றது.

இது போன்ற சூழ்நிலையில் தான் மனிதன், கடவுள் அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொள்கிறான். ஜோசியம், அச்ட்ராலாஜி, கார்ட் ஜோசியம், கை ரேகை உள்ளிட்டவை இதில் அடங்கும் இன்று மட்டும் ஒரு இருநூறு ரூபாய் செலவு செய்திருப்பேன் இது போன்ற விஷயங்களில்.

நான் தெளிவாக இருக்கும் நேரத்தில் இது போன்ற விஷயங்களை ஏமாற்றுவேலை என்று விமர்சனம் செய்தாலும், அவசியம் வரும்போது தான் தவறு நடக்கிறது.

இதற்கு முதலில் நல்ல மருந்து (வழி) ஒன்றை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும்.....!



No comments:

Post a Comment