
சப்னா வியாஸ் படேல் அவங்களோட உடம்ப குறைச்ச பார்முலா இது தான்,
நீங்க சாப்புடற உணவுல இருக்கிற கலோரி < தேவையான கலோரி
என்ன புரிஞ்சுதா ??? அதாவது நாம சாப்புடுற உணவில் உள்ள கலோரி, நமக்கு தேவைப்படுற அளவ விட கம்மியா இருக்கணும், அவ்ளோதாங்க.
உட்கொள்ளும் கலோரிகளை விட 500 கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் தற்போது 1800 கலோரி உணவை உட்கொண்டு வந்தால் அதை 1300 ஆக குறைக்க வேண்டும். அப்போது தான் ஒரு மாதத்தில் 1 கிலோ எடை குறையும். உடனே ஏன் 1000 கலோரிகள் கம்மியா எடுத்துக் கொண்டால் 2 கிலோ குறையுமே என்று கணக்கு போடாதீர்கள். எடை குறைவது நிதானமாக இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ குறைவது சரியானது, போதுமானது.
இந்த 500 கலோரிகளை குறைக்க நீங்க ரொம்ப கஷ்டப்படத்தேவையில்ல, திராட்சை சாறுக்கு பதிலாக ஆரஞ்சு ஜுசு ,(அ) ஒரு கரண்டி சாதம் குறைவா சாப்பிட்டா போதும்.
• புரதம் செறிந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீங்க. பால், இறைச்சி, மீன், கோழி இறைச்சி, முட்டை, பருப்பு வகைகள், வேர்கடலை முதலியன புரதம் உள்ளவை.
• கொட்டைகள், உலர்ந்த பழங்கள் வெல்லம், கிரீம், பால் வெண்ணை, உளுந்து, நெய், எண்ணைகள், தயிர் இவைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவுகள் மாறும்.
• ஸ்டார்ச் நிறைந்த உருளைக்கிழங்கு, கேரட், சேனைக்கிழங்கு இவற்றை அதிகம் உண்ண வேண்டாம். கோதுமையை விட அரிசி எடை கூட உதவும், ஆக முடிந்த வரை அரிசி உணவை தவிர்த்து சப்பாத்தி சாப்பிடலாம்.
• தினம் மூன்று நான்கு வேளை நல்ல “சிரிய அளவில் உணவு” உட்கொள்ளுங்கள். இரவு உணவு கூட முடிந்த வரை 'லயிட்டாக' இருக்கட்டும். படுக்கு முன் ‘ஸ்நாக்ஸ்’ சிற்றுண்டிகளை (பிஸ்கட் போன்றவை) சாப்பிட வேண்டாம்.
• சாப்பிடும் முன்பும், சாப்பிடும் போதும் முடிந்த வரை தண்ணீர் குடிக்கவும்.
• எடை கூடுவதற்கு உதவும் மாமிச உணவு ஆட்டு மாமிசம் தான் என்கிறது ஆயுர்வேதம், அதனால் முடிந்த வரை மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்கவும். முட்டையில் மஞ்சள் கருவை தவிருங்கள். வெள்ளை பகுதி இரண்டிற்கு மேல் வேண்டாம்.
• பகலில், தூந்குவதை நிறுத்துங்கள், இரவில் குறைந்த நேரம் தூங்க வேண்டும். (6 முதல் 8 மணி நேரம் மட்டும்)
• லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இரவு உணவுக்கு பின் நடப்பது நலம்.
இந்த பதிவுகளையும் பாருங்கள் :
இந்த பதிவுகளையும் பாருங்கள் :
No comments:
Post a Comment